2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் போராட்டங்களை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 2.3.2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அப்போது திமுக மாவட்ட செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து 90 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 4வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருநாவுக்கரசு சபரிராஜன் மணிவண்ணன் ஹெரோன் பால், சதீஷ், பாபு ,வசந்த் அருளானந்தம், அருண்குமார் உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிழா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தற்போது குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 90 நபர்களும் வரும் 12.6.2025 இன்று பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணகுமார்19 7 அன்று மீண்டும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்
2019 ஆம் ஆண்டு திமுகவினர் மீது போடப்பட்ட வழக்கில் ஒரே நீதிமன்றத்தில், திமுகவினர் ஆஜரானால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினர் இந்த மறியல் நடந்த பிறகு தான் அந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த விசாரணை அடிப்படையில் தான் குற்றவாளிகள் இப்பொழுது தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்ற இந்த மறியல் உண்மை என்பது புலப்படுகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது.
எனவே உண்மையாக உண்மையைக் கொண்டு வர பாடுபட்ட இந்த வழக்கை அரசு முன் நின்று வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் திமுகவினரின் கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் வழக்கை சந்தியுங்கள் என்று சொல்லுவது ஒரு சால சிறந்தது.
இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்காக போராடுகின்ற வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் நீதிபதிகளினுடைய அறிவுரை எனவே அதை நாங்கள் முன்னெடுத்து செல்வோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.















