தவெகவில் புதிதாக இணைபவர்கள் கட்சி நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து இணையும் நிலையில், மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் கைதான பூபாலன் மட்டும் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது எப்படி? விஜயை அவருக்கு அறிமுகப்படுத்தியது யார்? கட்சியிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா?. அவரை தமிழ்நாடு காவல்துறை பிடிக்கவில்லையே. மத்திய அரசுதானே பிடித்துள்ளது. இதுதான் தூய ஆட்சியா? எல்லோரும் காரித்துப்புகிற ஆட்சியாகத்தானே இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானும் கட்சி தொடங்கலாம். எல்லோரும் வந்துவிட்டு போய்விடுவார்கள். விஜய் சீக்கிரத்தில் போய்விடுவார். அவர் கட்டம் முடிந்துவிட்டது. அதேபோல ஒவ்வொருத்தராக வந்துவிட்டு போய்விடுவார்கள். மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி:-
மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 2500-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 170 பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டிருக்கிறார். லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்சஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வது இயற்கை. விசாரணையின் முடிவிலேயே உண்மை நிலவரம் தெரியும். அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சி செய்து 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கட்சி. சுயலாபத்திற்காகவோ பதவிக்காகவோ கட்சியை விட்டு செல்பவர்கள், ஆற்றில் விடப்பட்ட காகிதக் கப்பல் போன்றவர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் நிற்கும் உண்மையான தொண்டர்கள் எப்போதும் கல்வெட்டு எழுத்துக்களைப் போல் கட்சிக்காக உறுதியாக நிற்பார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு போன்றவற்றில் தவெக அரசுக்கு எவ்வித கவனமும் இல்லை. விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதிலும் விளையாட்டு பிள்ளைகளாக மெத்தனம் காட்டி வருகின்றனர்.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் உரிய தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்காமல், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கும் குதிரைபேர அரசியல் சிந்தனையிலேயே தவெக அரசு மூழ்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைபவர்கள் கட்சி நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து இணைந்து வரும் நிலையில், நாகப்பட்டினத்தில் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் கடத்தலில் தொடர்புடைய பூபாலன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். விஜயை இவருக்கு அறிமுகப்படுத்தியது யார்? இது குறித்து விஜய் ஏன் இதுவரை வாய் திறக்காமல் தூங்குகிறார்?” அவரை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா?. அவரை தமிழ்நாடு காவல்துறை பிடிக்கவில்லையே. மத்திய அரசுதானே பிடித்துள்ளது. இதுதான் தூய ஆட்சியா? எல்லோரும் காரித்துப்புகிற ஆட்சியாகத்தானே இருக்கிறது.
நடிகர் தனுஷ் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானும் கட்சி தொடங்கலாம். எல்லோரும் வந்துவிட்டு போய்விடுவார்கள். விஜய் சீக்கிரத்தில் போய்விடுவார். அவர் கட்டம் முடிந்துவிட்டது. அதேபோல ஒவ்வொருத்தராக வந்துவிட்டு போய்விடுவார்கள்.
தமிழகத்தில் காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் அரசுப்பள்ளிகள் என எதிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மருத்துவமனைகளில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து அலைக்கழிக்கும் நிலைதான் நீடிக்கிறது. எதற்கும் நிதி ஒதுக்காமல், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. மக்களைக் காக்கும் எண்ணம் இல்லாமல், வெறுமனே வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் எடுத்துப் போடும் விளம்பர ஆட்சியாகவே தவெக ஆட்சி செயல்படுகிறது என்றார்.







