பொறையார் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் சுற்றி திரியும் கால்நடைகள் தெரு நாய்கள் .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்குப்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் ராஜூவ்புரம் தரங்கம்பாடி சங்கரன் பந்தல் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் சாலைகளில் கால்நடைகள் மற்றும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிவதாலும் சாலைகளில் படுத்து கிடப்பதாலும் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் சிரமம் ஏற்படுகிறது மேலும் இரு சக்கர வாகனம் அதிவேகத்தில் வரும் பொழுது விபத்து ஏற்படும் சூழலும் உருவாகி வருகிறது எனவே சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுப்பதற்கு கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை வீடுகளில் இரவு நேரத்தில் பாதுகாக்க வேண்டும் எனவும் மேலும் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மற்றும் தெரு நய்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







