திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் தூய்மை பணியில் 200க்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களின் உடல்நிலை பாதுகாக்க நகராட்சி அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்ற முகாமை நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி சார்பில் கையுறைகள், முக கவசம், தலைக்கவசம், துப்புரவு பணியாளர்கள் அடையாள சீருடை உள்பட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு பயன் பெற்றனர்.

















