மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன தணிக்கை: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி நடவடிக்கை!
மதுராந்தகம்:
அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மதுராந்தகம் அருகிலுள்ள கருங்குழி பகுதியிலும், – பூதூர் செல்லும் முக்கிய சாலையிலும் , அவ்வழியாகச் செல்லும் அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களும் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன..
இந்த சோதனையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை உதவியுடன் இந்த வாகனத்தணிக்கை செய்யப்பட்டு வருகின்றனர்.

















