செங்குன்றம் அருகே போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
செங்குன்றம் அடுத்த கோட்டூர் பால விநாயகர் நகர் சேர்ந்தவர் செல்வகுமார் 42 இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ராஜாத்தி மனைவியும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் ராஜாத்தி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐடி கம்பெனியில் பணியாற்று வருகிறார் இருவரும் குழந்தையை புழல் பகுதியில் உள்ள தாத்தா வீட்டுக்கு அனுப்பிவிட்டு பணிக்கு சென்று விட்டு இரவு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது இது குறித்து புகாரின் பேரில் செங்குன்றம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர் போலீஸ்காரர் வீட்டிலே கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













