மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில்வே கேட்டில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மூடிய ரயில்வே கேட் திறக்க முடியாத காரணத்தால், நடுவழியில் சிக்கிய வாகனங்கள், போக்குவரத்து பாதிப்பு, வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியே தினமும் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் வழியே, எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ரயில் வந்து சென்ற பிறகு, ரயில்வே கேட்டின் இடது புறத்தில் கதவு தொழில்நுட்பக்கோளாறு (key lock) காரணமாக திறக்க முடியவில்லை. இதன் காரணமாக நடுவழியில் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டது மேலும் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில், வாகன நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் போராடி, கோளாறை சரி செய்தனர், அவ்வழியே வந்த நபர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.













