திருவிடைக்கழி அருகே பூச்சாத்தனூர் கிராமத்தில் இடப் பிரச்சனை தகராறு மற்றும் ஊராட்சி குளத்தில் அனுமதி இல்லாமல் மீன் பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார். அண்ணனுக்கு கை எழும்பு முறிவு, தம்பி வீட்டை சேதப்படுத்தியதாக புகார். சம்பவம் நடந்து 20 நாட்களை கடந்தும் பொறையார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி அருகே பூசாத்தனூர் கிராமத்தில் சகோதரர்களான ரவி, ராஜா தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரவி வீடு அருகில் வசித்து வரும் மோகன் ஆகிய இருவருக்கும் இடையே இட பிரச்சனை உள்ளது. இந்நிலையில் ரவியின் தம்பி ராஜா ஊராட்சி குளத்தில் அனுமதி இல்லாமல் மோகன் தரப்பினர் மீன்பிடித்ததாக ஊராட்சி அலுவலகம் மற்றும் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது இடத்தை அளக்க ராஜா விண்ணப்பித்துள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக மோகன் மற்றும் அவரை சார்ந்த அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளையராஜா, பாலுசாமி, காளிமுத்து பாலுசாமி மகன் பாலாஜி ஆகியோர் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற ரவியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலது கையில் ரவிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தடுக்க சென்ற அவரது மனைவி சியாமளா தேவியையும் தாக்கிய நிலையில் ரவியின் தம்பி ராஜா வீட்டிற்கு சென்று அவரது வீட்டையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ரவி சியாமளாதேவி ஆகிய இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்களில் மனைவி சியாமளாதேவி வீடு திரும்பிய நிலையில் ரவிக்கு கையில் அறுவை சிகிச்சை செய்து ப்ளேட் வைக்கப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு மேலாக தற்பொழுதும் சிகிச்சையில் உள்ளார். ஆனால் வழக்குப்பதிவு செய்த பொறையார் போலீசார் தங்களை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். ராஜா தனது வீட்டிற்கு செல்லமுடியாமல் தவித்து வருவதாகவும் உடனடியாக போலீசார் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துவரும் 5 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: ரவி பாதிக்கப்பட்டவர், ராஜா வீட்டை சேதப்படுத்தும் காட்சிகள், ராஜா புகார் தெரிவிக்கும் ஆடியோ உள்ளது













