விழுப்புரம் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்கு விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர், சமூகநீதி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், ஆர். பசுபதி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த அனைவரும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்றும், சமூகநீதியை நிலைநாட்ட பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமதாஸ் செங்குட்டுவன் அதிமுக நிர்வாகிகள் பாலாஜி உடன் இருந்தனர்












