திருக்கடையூர் கோவிலில் நடிகை நளினி சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு வழிபாடு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் நாள்தோறும் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர் வருடம் 365 நாட்களும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது ஆயுள் விருத்தி ஆயுள் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் என சிறப்பு யாகங்கள் செய்து வழிபாடு செய்கின்றனர் இந்நிலையில் திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகை நளினி சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு யாகம் செய்து வழிபாடு செய்தார் முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகை நளினிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் அவரது உறவினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.













