விழுப்புரம் 300 பேருக்கு பிரியாணி & புடவைகள்! விழுப்புரத்தில் விமரிசையாக நடந்த கேப்டன் பிறந்தநாள் விழா.
விழுப்புரத்தில் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் வடக்கு நகரக் கழகம் சார்பில் 10-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழுப்புரம் ) , வடக்கு நகரக் கழகச் செயலாளர் க. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரக் கழகத் துணைச் செயலாளர் வேம்பு மைலப்பன் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 300 பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் 300 புடவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநில கேப்டன் மன்றச் செயலாளர் ராஜசந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதவன் முத்து, தெற்கு நகரக் கழகச் செயலாளர் இளையராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்ட நிலையில், 10-வது வார்டு செயலாளர் மயிலப்பன் சிவகுமார் மற்றும் நகர வர்த்தக அணி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.













