ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி.. தட்டுப்பாடு இல்லாமல் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை..”
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்..
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தின் மொத்த விற்பனை நிலையங்களாக செயல்பட்டு வருகிறது.. மேலும் திருவாரூர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தனியார் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளது..
தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலமாக நான்கு விதமான பால் விநியோகிக்கப்படுகிறது. பிரிமியம்.. டிலைட்,கிரீம், படுத்தப்பட்ட பால் போன்ற பெயர்களில்… ஆரஞ்சு,வைலட், நீளம், பச்சை நிறங்கள் கொண்ட உரையில் அடைக்கப்பட்ட பால் விநியோகிக்கப்பட்ட வருகிறதுத…
இதில் குறைந்த விலையில் பச்சை நிற உரையில் அடைக்கப்பட்டு விற்கப்பட்ட பால் ஒரு லிட்டர் வாடிக்கையாளருக்கு 44 ரூபாய் தொகைைக்கு விற்கப்பட்டது..
இந்த பாலை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட அந்த பால் தற்போது நிறுத்தப்பட்டு விற்பனைக்கு வருவதில்லை.. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஆவின் பால் குறைந்த அளவே சப்ளை செய்யப்படுவதாக பால் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்..
தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தை இரண்டாக பிரித்து திருவாரூர் மாவட்டத்தில் தற்போது ஆவின் நிறுவனம் கடந்த இரண்டு மாதமாக இயங்கி வருகிறது.. இருந்தாலும் ஆவின் பால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தான் திருவாரூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது..
ஆவின் பால் தஞ்சாவூர் பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு தான் திருவாரூர் பகுதிக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது..
மேலும் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாலும்… அதற்குரிய தொகை விவசாயிகளுக்கு தாமதமாக வழங்கப்படுவதாலும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பாலை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது..
மேலும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால் சென்னை பகுதிக்கு அனுப்பப்பட்ட பின் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பகுதிக்கு பால் விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது..
இதுபோன்ற காரணங்களாலேயே தற்போது ஆவின் பால் திருவாரூர் மாவட்ட பகுதியில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றனர்.
தனியார் நிறுவனத்தின் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில். தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் பாலின் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக ஆவின் பாலையே வாங்கும் நிலையில் தற்போது தட்டுப்பாடு நிலவுவதால் திருவாரூர் மாவட்ட பகுதியில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்..
அரசு உடனடியாக திருவாரூர் மாவட்ட பகுதிக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.













