விழுப்புரம் UATT 2.0 திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
உழவர்களையும், தோட்டக்கலை பட்டதாரிகளையும் பாதிக்கும் UATT 2.0 திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வல்லுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
தோட்டக்கலை துறையின் வளர்ச்சியை பாதிக்கும் இந்த திட்டத்தை அரசு உடனே திரும்ப பெறாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்தனர். பேட்டி:வெங்கடேசன் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்















