மயிலாடுதுறையில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு புகழ் பெற்ற பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சமையல் கலைஞர்கள் 45ம் ஆண்டாக பால் குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு, பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாத வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி இன்று சமையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 45வது ஆண்டாக பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றின் துலாக்கட்டத்திலிருந்து பால்குடம்; எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க, பச்சைக்காளி பவளக்காளி நடனத்துடன், யானை முன்னே செல்ல, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மயிலாடுதுறை சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்















