திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம் – ரயில்வே போலீசார் உதவியுடன் திருவாரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி இன்று காலை 10 மணி அளவில் சென்ற பயணிகள் ரயில், மருதப்பட்டிணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண்மணி யார்.? எந்த ஊர்.?எதனால் ரயில அடிபட்டார்.? என்பது குறித்த விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

















