மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூதனமுறையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதிகளை பேனர்களாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் வீடியோ வைரல்
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்சன் மகள் ரிஷிகா ஷெர்லின் ஆர்லன்ஸ்டீவ் தம்பதி திருமணம் ஏற்றக் கோடு புனித சவேரியார் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்த்தாண்டம் பிரபல தனியார் மண்டபத்தில் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்,பச்சைமால் , அதிமுக அமைப்பு செயலாளரும் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சின்னதுரை ,சிவகுற்றாலம் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி மண்டபம் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் அதிமுக கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் நலன் மாதம் தோறும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் குல விளக்கு திட்டத்தின் கீழ் 2000 ரூ , ஆண், பெண் இருபாலருக்கும் கட்டணம் இல்லா பேருந்து , அனைவருக்கும் வீடு அம்மா இல்ல திட்டம்,100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் ,அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என முதற்கட்ட வாக்குறுதிகளை பேனர்களாக மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சாலையில் வரிசையாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

















