தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர் :-
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா அலுவலகங்களில் அந்தந்த தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீனமயமாக்கம் செய்யப்பட்ட அலுவலகம் அமைத்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களுக்கு பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக கிராம அளவிலான வருவாய்த்துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது
















