சீர்காழியில் குப்பைகள் அள்ள வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக குப்பைகள் சரி வர அள்ளப்படாமல் நகரில் சுகாதார சீர்கேடு. வாகனம் இல்லாமல் குப்பைகளை மூட்டைகளில் கட்டி ஒவ்வொரு பகுதியாக இழுத்து சென்று குவித்து வைப்பதில் அதிக பளுவால் உடல் பாதிப்பு ஏற்படுவதாக ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் குற்றசாட்டு.
தூய்மை பணியாளர்களுக்கு தேவையான வாகனங்கள், உபகரணங்களை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் வழங்கிட கோரிக்கை.
















