உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா சாமி தரிசனம் பலர் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இந்த ஆலயம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக விளங்குகிறது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவில் இக்கோவிலில் நாள்தோறும் வருடம் முழுவதும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் என வயது மூப்பு திருமணங்கள் நடைபெறுகிறது சிறப்பு யாகங்கள் நடைபெறுகிறது இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி மயிலாடுதுறை ரஜினி பாஸ்கர் செந்தாமரை பாஸ்கர் அவர்களின் சஷ்டி பூர்த்தி விழா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் உடன்பிறந்த அண்ணன் சத்திய நாராயணா வந்து வாழ்த்தினார் பின்னர் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது அவர்களுடன் பலர் ஆர்வத்துடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
















