விழுப்புரம் நகரத் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து,பள்ளி மாணவ, மாணவிகள் தயாரித்திருந்த அறிவியல் மாதிரிகள், தொழில்நுட்ப விளக்கங்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்,ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த திட்டங்களை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பி,அவர்களின் சிந்தனைத் திறனை பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், முத்து சரவணன் முதல்வர் யமுனாராணி, ஒருங்கிணைப்பாளர் ஜே.அப்பு பள்ளி ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும்,மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் குறித்த சிந்தனை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













