சீர்காழியில் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. 48 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய 48 முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நெகிழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.1896 ஆம் அண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, மாணவர்களுக்கு கல்வியை புகட்ட வீதிதோறும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பல ஏழை மாணவர்களின் உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது.
இப்பள்ளியில் பயின்ற பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உயர் பதவிகளை வகித்து வந்தனர்.தற்போதும் பலர் உயர் பதவிகளிலும் வெளி நாடுகளிலும் பணியில் உள்ளனர்.
இப்பள்ளியில் 1978 ஆம் ஆண்டில் பதினோராம் வகுப்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 48 பேர் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளிக்கு பயனுள்ளதாக ஆக்கும் வகையில் பள்ளி கணினி அறைக்கு தேவையான பாதுகாப்பு இரும்பு கிரில் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கு வழங்கினர்.
தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்ததோடு, கல்வி பயின்ற அனுபவங்கள் தற்போது இஸ்ரோ மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்புற திகழும் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கினர்.தங்களுடன் பயின்ற ஏழ்மையான முன்னாள் மாணவருக்கு உதவிகளை வழங்கினர்.
தங்கள் ஆசிரியர்களையும் கௌரவித்து மரியாதை செய்தனர்.நிறைவாக பள்ளி வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.














