தடையை மீறி சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மூலவரின் சிலையை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சோசியல் மீடியா இன்புளுயன்சர்.. சுசீந்திரம் போலீஸார் விசாரணை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள் பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில வெளிநாட்டு பக்தர்கள் தினசரி ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த சோசியல் மீடியா பிரபலம் மதுமிதா மற்றும் அவர் கணவருடன் சேர்ந்து கோவில் வளாகத்துக்குள் மூலவரின் சிலை தெரியும் வண்ணம் ரீல்ஸ் எடுத்துள்ளனர். தற்போது அந்த ரீல்சானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது அதை தொடர்ந்து பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆகம விதிகளுக்கு எதிராகவும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக கோவிலில் மூலஸ்தானம் மற்றும் உட்புற பகுதி தெரியும் படி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கோவிலின் புனிதத்தை மீறி இத்தகைய செயலின் ஈடுபட்ட அந்த நபரை சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















