திருவாரூரில் திமுக சார்பில் சமூக நீதிக்கான கலைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கீழ சன்னதி தெருவில் திமுக மாவட்ட கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தலைப்பிலான சமூக நீதிக்கான கலைத்திருவிழா நடைபெற்றது.
இதில் மானாட்டம் , மயிலாட்டம் , கரகாட்டம் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக கலைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் , மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ் மற்றும் ஒன்றிய பேரூர் சார்பணி நிர்வாகிகள் ஏராளமானோர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.














