பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி…
மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் கலை விழா:- மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ தொடக்கி வைத்த நிகழ்ச்சியில்
பரதம் கிராமிய கலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன:-
சென்னையில் கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதை போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக முதல்வர் பிறப்பித்து இருந்தார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தனர். இதில் பரதநாட்டியம், கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்களின் பச்சைக்காளி, பவளக்காளி நடனம், நையாண்டி மேளம், சிலம்பம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் முதல் நிகழ்வாக பரதநாட்டியத்தில் பரதம் ஆடும் போதே யோக கலைகளில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்திய சிறுமியால் நெகிழ்ந்த பார்வையாளர்கள் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனை கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியரும், எம்எல்ஏவுமான சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

















