முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் காலை முதலே வருகை தந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் மலர்மாலை, சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

















