பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் மதுராந்தகத்தில் இன்று கூட்டணி கட்சி சார்பில் பூமி பூஜை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
2026 பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி 6 மாதங்களுக்கு முன்பே அமைந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக கடந்த வாரம் இணைந்தது. தமாகா ஏற்கெனவே கூட்டணியில் உள்ளது. மேலும், புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளன. இதனை உறுதி செய்ய நோக்கத்தில் வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார் இதனை ஒட்டி இன்று அதற்கான மதுராந்தகத்தில் பூமி பூஜை நடைபெற்றது இந்த பூமி பூஜையில் ADMK பாமக பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இந்த பூமி பூஜையில் பங்கேற்று உள்ளனர்.

















