திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த தொன்மைவாய்ந்த தேவாலயம் அமைந்துள்ளது. இதனை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து தேவாலயத்தை சுற்றி பார்த்து வணங்கி செல்வது வழக்கமாக உள்ளது. 1870 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு,1884 இல் கட்டப்பட்ட இந்த புகழ்பெற்ற பெரும்பண்ணையூர் தேவாலயம் ஐரோப்பிய கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்த இந்த தேவாலயம் ஒரு சில இடங்களில் பழுதடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக விளங்கும் திராவிடமாடல் முதல்வர் இந்த பழம் பெருமை வாய்ந்த தொன்மை வாய்ந்த பெரும்பண்ணையூர் தேவாலய சீரமைப்பு பணிகளுக்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டார். இதற்காக தேவாலயம் சார்பிலும் பெரும்பண்ணையூர் கிராம மக்கள் சார்பிலும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி, தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
பேட்டி : பூண்டி கலைவாணன் – திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்

















