திருவாரூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடிய மாணவ மாணவிகள்.
திருவாரூர் நகர பகுதிக்கு உட்பட்ட பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியுடன், அங்கன்வாடி மையம், காது கேளாதோர் சிறப்பு பயிற்சி பள்ளி ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. வரும் தை ஒன்றாம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், காது கேளாதோர் சிறப்பு பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கூறி கரகோஷம் எழுப்பி உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். முன்னதாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இனைந்து வெண் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கலை தயார் செய்தனர். தொடர்ந்து பொங்கல் பானையை பாதுகாப்பாக எடுத்து வந்து மாணவர்கள் மத்தியில் வைத்து கொண்டாடி இறைவனுக்கு படையலிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோருடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

















