September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் MLAதலைமையில்250குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவபொங்கல் விழா

by Satheesa
January 7, 2026
in News
A A
0
நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் MLAதலைமையில்250குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவபொங்கல் விழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நன்னிலம், ஜன.8- நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் 250 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ சிலம்பம் சுற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சரான இரா.காமராஜ் எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பசு மாடுகளுக்கு கோ பூஜை செய்து, குத்து விளக்கு ஏற்றி, செங்கல் அடுப்பில் மண்பானை வைத்து, பொங்கல் பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து ஆகியவை கட்டப்பட்டு பானைகளுக்கு திலகமிட்டு அடுப்பில் வைத்து தீ மூட்டினர். அதன் பின்பு பானையில் பால் ஊற்றி பொங்கல் பொங்கிய பின்பு வெள்ளம், ஏலக்காய், முந்திரி, திராட்சைகள் போட்டு அகப்பையால் கிண்டி பொங்கலிட்டனர். இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் இருபுறங்களிலும் கரும்பு, தோரணம் கட்டப்பட்டு பொங்கல் இட்டனர். அதனை தொடர்ந்து விவசாயத்திற்கும், உயிர்களுக்கும் ஆதாரமான சூரிய பகவானுக்கு சூடம் ஏற்றி நன்றி தெரிவிக்கும் ஒரு சூரிய வழிபாடு செய்தனர். முன்னதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காமராஜ் எம்எல்ஏ மாணவ, மாணவிகளோடு சிலம்பம் சுற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது, பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். தமிழர்களின் வீரத்தையும், நன்றி உணர்ச்சியையும் காட்டுகின்ற கலாச்சார விழா. இந்த விழா தமிழகத்தில் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவான விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், நன்னிலம் பேரூர் செயலாளர் பக்கிரிசாமி, பேரளம் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: admkdistrict newspongal celebrationR. Kamaraj MLAtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சத்துணவுஅங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6,750அகவிலைப்படியுடன் வழங்க,ஈமக்கிரியை தொகை ரூ.25,000வழங்க ஆர்ப்பாட்டம்

Next Post

விழுப்புரத்தில் தொழிலாளர் நலஅலுவலக  உதவிஆணையரின் பணி பாராட்டி தொழிற்சங்கத்தினர் மாலை  அணிவித்து பாராட்டினர்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.