பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுதொகுப்பில் செங்கரும்பு கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகளாக கொண்டாடப்படும் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட அறிவித்துள்ளது. பரிசு தொகுப்பில் பொங்கல் செங்கரும்பு வழங்க உத்தரவிட்டு அந்தந்த பகுதியில் விவசாயிடம் கொள்முதல் செய்து நேரடி நியாய விலை கடைகள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு முழு கரும்புடன் வழங்க உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அல்லிவிளக்கம், காத்திருப்பு ,செம்பனிருப்பு ,நடராஜன் பிள்ளை சாவடி ,உள்ளிட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரடியாக கொள்முதல் செய்யும் கரும்பு வயலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கமலக்கண்ணன் ,வேளாண்மை துறை இணை இயக்குனர் விஜயராகவன் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் கரும்பு விவசாயிகள் உடன் இருந்தனர் .
















