மயிலாடுதுறை அருகே குளிச்சார் பாசன வாய்க்கால்களில் கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்டு செம்பனார்கோவில் போலீசார் விசாரணை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா குளிச்சார் சேரன்தோப்பு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ராமச்சந்திரன்(30) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த செல்வபிரியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிய நிலையில் குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், இன்று காலை குளிச்சார் பாசன வாய்க்கால் தண்ணீரில் ராமச்சந்திரன் முகத்தில் காயங்களுடன் சடலமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















