அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பங்களிப்பு புதிய ஓய்வூதியம் திட்டம் லேப்டாப் வழங்கிய முதல்வரின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம் எல் ஏ வேண்டுகோள் விழுப்புரம் ராகவன் பேட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தலைமை தாங்கி பேசிய மாவட்ட பொறுப்பாளர் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கூறியதாவது தமிழகத்தின் பெண்கள் நலனுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அறிவித்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளார் அதேபோல் மாணவர்களுக்கு கனவு திட்டமான லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் நிறைவேற்றி அவர்களின் கையில் அதை கொண்டு சேர்த்துள்ளார் மேலும் பொங்கலுக்கு இனிப்பான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பொங்கல் பரிசு தொகப்பாக ரூபாய் 3000 ரொக்கம் பணம் வழங்கி மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை அறிவித்துள்ளார் இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் இதை எல்லாம் வாக்காக மாற்றுவது தான் நிர்வாகிகளின் பணி இந்த பணியை சிறக்க செய்து தமிழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுகவின் ஓட்டு அதிகம் பெற்ற மாவட்டமாக ஒரு முன்மாதிரியாக நாம் திகழ்ந்த நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார் நகர செயலாளர் வெற்றி நகர மன்ற உறுப்பினர் மணவாளன் உடன் இருந்தார்

















