மயிலாடுதுறை அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 823 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மடிக்கணினிகளை வழங்கினார்:-
சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 823 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மொத்தம் 4,427 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.பி சுதா, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















