உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் ரூபாய் 4.13 கோடி மதிப்பீட்டில் கமலாலய திருக்குளத்தின் தெற்கு கரை பழுது பார்த்து புதுப்பித்தல் பணி மற்றும் ரூபாய் 3.70 கோடி மதிப்பீட்டில் தியாகராஜர் திருக்கோவிலின் தேவாசிரிய மண்டபம் பழுது பார்த்து புதுப்பித்தல் பணிகள் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தன்னை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ராணி, திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர் மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், வட்டாட்சியர் ஸ்டாலின், செயல் அலுவலர் கவியரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

















