திருவள்ளூர் அருகே நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான மருத்துவ பயனாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட தோமூர் ஊராட்சியில்
தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். முன்னதாக கடம்பத்தூர் ஒன்றியத்தில்
கூவம் ஆற்றின் குறுக்கே சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் கூவம் ஆற்றின் குறுக்கே தண்டலம் – கசவநல்லாத்தூர் இடையே ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 17 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியினையும் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பிரதாப்,ஒன்றிய செயலாளர்கள் மோதிலால்,ஞானஒளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும்,அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.














