பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் கட்டணங்கள் விமானப் பயணத்தை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என்றும், வரும் 18 அல்லது 19ம் தேதி அன்று செயல்பாட்டிற்கு வரும், என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இன்று தெரிவித்தார்.
புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தயாராகிவிடும் என்றும், இது முதலில் குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி முதல் ஆமதாபாத் வரை இயக்கப்படும், என்றும், அவர் கூறினார்.
படுக்கை வசதியுடைய வந்தேபாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். அதில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றபோதும், ரெயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர், சிதறாமல் இருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

















