மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி ஊராட்சிக்குட்பட்ட அப்பராசர்புத்தூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் அப்பராசபுத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின் போது ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் சதீஷ் மற்றும் பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஒரு வாரத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொல்லப்பட்டது இச்சாலை மறியல் போராட்டத்தால் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

















