கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால் பரபரப்பு :
பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பெண்ணை குண்டுகட்டாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர் !
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென எழுந்து முதல்வரை பார்த்து சார் சார் என கையில் மனுவுடன் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது நிலத்தகராறில் பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முதலமைச்சர் இடம் மனு கொடுக்க தான் கூச்சலிட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது தனது கைக்குழந்தையுடன் பெண் சார் சார் என கூச்சலிட்ட சம்பவம் முதல்வர் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…















