திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, எய்ட்ஸ் தடுப்பு திட்ட அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் முக்கிய முடிவை எடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 2026, ஜனவரி 4-ஆம் தேதி சென்னை யில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் இந்த ஒப்பந்த ஊழியர்கள், பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தங்களை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்ததாகவும் கூறி, அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்தப் போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.

















