September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

by Kavi
December 12, 2025
in News
A A
0
நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நடிகர் ரஜினிகாந்த் இன்று 75-வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில், அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டிருக்கும் பதிவில், ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள், பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட உலகில், ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, தாம் பிரார்த்தனை செய்வதாகவும், பிரதமர் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், ரஜினிகாந்த் மேடையில் ஏறினால், அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை கொண்டவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத, கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறிலிருந்து அறுபது வரைக்கும், அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பர் ரஜினிகாந்த்திற்கு, உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும், ரஜினிகாந்தின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறி இருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, எக்ஸ் தளத்திலும் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத பேராளுமையாக, 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்திற்கு, இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல, தங்களின் ஸ்டைல் மேஜிக், ரசிகர்களை பல்லாண்டு காலம் மகிழ்விக்கட்டும் என்று, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, பிஜேபி முன்னாள் தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பலர், நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags: PM MODIrajini birthdayrajini wishes
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் சாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி செலவாகும் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

July 12, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.