விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் சவிதா பேருந்து அருகே அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச்செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் ஏற்பாட்டில் அதிமுக விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி மற்றும் ராமதாஸ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

















