தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது உறுப்பினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் சபாநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு இணையாக 2016 க்கு முன் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் இவர்களுக்கு மறு நிர்ணயம் செய்திட வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் போது கம்ப்யூடேஷன் தொகையை 15 ஆண்டாக கொடுப்பதை 12 ஆக குறைக்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்வேறு இடர்பாடுகளைக் கொண்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எருக்கு உரைச்சந்த தட்சிணாமூர்த்தி என்ற உறுப்பினர் மயங்கி விழுந்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட செயலர் பெரியய்யா பொருளாளர் முத்துக்குமாரசாமி முன்னாள் மாவட்ட தலைவர் பரமசிவம் மாவட்ட துணை தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

















