சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள் வடிகால வசதி ஏற்படுத்தி தர அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக டிட்வா புயல் உருவாகி கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி உட்பட்ட காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சுழ்ந்து வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஐந்து நாட்களாக மக்கள் தவித்து வருகின்றனர் ,
மேலும் பள்ளி மாணவர்கள் இந்த சாலையை கடந்து தண்ணீரில் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என சிலிண்டர், பால் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் கனமழையினால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி வீடுகளில் முடங்கி வருவதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தர அந்த பகுதி மக்கள் தமிழக முதல்வர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.















