சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு . குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி ரூபாய் 10லட்சம் காசோலையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டிட்வா புயல் காரணமாக மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில் பிரதாப் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து தொங்கிய மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாகசாலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்து குறித்து அறிந்த
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் உயிரிழந்த பிரதாப் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சத்திற்கான நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை பிரதாப் பெற்றோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ,வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

















