விழுப்புரம் வ உ சி தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவர் அவரது மாருதி 800 காரை எடுத்துக்கொண்டு பாப்பான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் இஞ்சின் பகுதியில் இருந்து புகையுடன் தீ பற்றியது உடனே காரை சாலை ஓரம் நிறுத்தி அதை அணைப்பதற்காக முயற்சி செய்தபோது காரின் முன் பகுதி முழுவதும் தீ பறவி எரியத் தொடங்கியது அப்பகுதி மக்கள் உதவியுடன்bதீயை அணைக்க முயற்சி முயற்சி செய்து முடியாமல் அப்பகுதி மக்கள் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உதவி மாவட்ட நிலை அலுவலர் ஜமுனாராணி உத்தரவின் பேரில் போக்குவரத்து நிலை அலுவலர் சுரேஷ்குமார் தலைமை தானே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். காரில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஆப்பிள் போன் ஆகியவை தீயில் இருந்து நாசமானது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.















