வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 22,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றில் பல இடங்களில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பெய்த மழைகளில் இரண்டு முறை பயிர்கள் அழுகிய நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறை பயிர் செய்த விவசாயிகளும் அடங்குவர். தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்தாலும், ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர் எவரும் வரவில்லை எனவும், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவரும் பார்வையிட வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் அறுவடையின் பொழுது பருவம் தப்பி பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணமாக 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார் 11 மாதங்கள் ஆகியும் நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமன்றி திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை என்று பெரிதாக எந்த பலனும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன் தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் திமுக அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகின்றதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
பைட் :-
அன்பழகன் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்

















