தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக டிட்வா புயல் உருவாகி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோரகொல்லை கிராமத்தில் சுமார் 35 வீடுகளை மழை நீர் சுழ்ந்து வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இரண்டு நாட்களாக மக்கள் தவித்து வருகின்றனர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் கனமழையினால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி வீடுகளில் முடங்கி வருவதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் இனிவரும் காலங்களிலாவது வடிகால் வசதி ஏற்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தர அந்த பகுதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

















