திருப்பூர் மாநகராட்சியின் குப்பை மேலாண்மையில், மேயர் முறைகேடு செய்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
அதில் குப்பைகளை தரம் பிரிக்காமல் செயல்படாத பாறை குழிகளில் கொட்டியதில் சுமார் 7 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள மேயர் மீதான, குப்பை மேலாண்மை டெண்டர் சட்ட விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்ததை, ஆதாரமாக எடுத்துக் கொள்ளுபடியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
















