தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நெய்க்குப்பை ஊராட்சிக்குட்பட்ட புளிச்சகாடி கிராமத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆற்றங்கரை ஓரத்தில் கரையை பலப்படுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நம் மாநில மரமான பனை மரத்தின் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சுற்றுச்சூழல் அணையின் திருவாரூர் மாவட்ட தலைவர் காசிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக குடவாசல் ஒன்றிய கழகச் செயலாளர் பிரபாகரன் கலந்துகொண்டு ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை இருபுறமும் நடைபெற்ற இந்த பனை விதை நடும் பணியில் கிராம மக்கள், கழக நிர்வாகிகள், சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















