வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம், 8 முதல் 11 அடி வரை அலைகள் சீறிப்பாயும் என்பதால் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் :-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும், இது டெல்டா மாவட்டங்களின் கரையோரம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுதுள்ள அறிக்கையில், 28 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்றும், 8 முதல் 11 அடி வரை அலைகள் உயரமாக எழும்பும் என்றும், இதன் காரணமாக கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடற்கரை அருகில் செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்குமாறும், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















